பிறந்த நாளில் ஆபத்தான போஸ் கொடுத்த துருக்கி நபர் பலியான பரிதாபம்

பிறந்த நாளில் ஆபத்தான போஸ் கொடுத்த துருக்கி நபர் பலியான பரிதாபம்

ஆபத்தான செல்பி போஸ் கொடுத்து அதிக உயிரிழப்புகள் நடந்து வரும் நிலையில் துருக்கியை சேர்ந்த நபர் ஒருவர் உயரமான மலையில் பிறந்த நாளில் ஆபத்தான போஸ் கொடுத்து பரிதாபமாக பலியான திடுக்கிடும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

துருக்கியை சேர்ந்த ஹாலில் என்பவர் தனது பிறந்த நாளில் வித்தியாசமான போஸ்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஆசைப்பட்டார். இதனால் உயரமான மலைப்பகுதிக்கு நண்பர்களுடன் சென்ற அவர் விதவிதமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

அப்போது ஒரு இடத்தில் இருந்து சுமார் ஐந்தடி உயரத்தில் குதிக்க முடிவு செய்தார். ஆனால் குதிக்கும்போது திடீரென பேலன்ஸ் தவறி 150 அடி பள்ளத்தில் விழுந்தார். உடனடியாக அவருடைய நண்பர்கள் அவரை தேடிப்பார்த்தபோது அவர் பரிதாபமாக பலியாகியிருந்தது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published.