shadow

நயன்தாராவுக்கு சைக்கிள் ஸ்டண்ட் கற்றுக்கொடுத்த ஹாலிவுட் ஸ்டண்ட் நடிகர்

நடிகை நயன்தாரா நடித்து வரும் அதிரடி ஆக்சன் படம் ‘இமைக்கா நொடிகள். இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆக்சன் காட்சிகளில் கலக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் அதர்வா வில்லன் கோஷ்டிகளுடன் மோதும் சைக்கிள் சண்டையின் படப்பிடிப்பு பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த சண்டைக்காட்சிகளுக்கு ஹாங்காங்கில் இருந்து பிரபல சைக்கிள் ஸ்டண்ட் கலைஞர் லீ ஹான் யூ பயிற்சி அளித்து வருகிறார். இந்த ஸ்டண்ட் காட்சி திரையில் பார்க்கும்போது பிரமிப்பூட்டும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

டிமாண்டி காலனி’ இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் இந்த படத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றானர். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகவுள்ளது.

Leave a Reply