shadow

ஆபத்தான் ஆப்ஸ்கள். உடனே அன்-இன்ஸ்டால் செய்யும்படி மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்திய ராணுவத்தை உளவு பார்த்த விவகாரம் குறித்து எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, Smesh App என்ற அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில ஆப்ஸ்கள் இந்தியர்களின் பணப்பரிவர்த்தனைகளை கண்காணித்து வருவதாகவும், அதனால் எச்சரிக்கையாக இருக்கும்படியும் பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக Top Gun என்ற Gaming App, Mpjunkie என்ற Music App, Bdjunkie என்ற Vidoe App, Talking Frog என்ற Entertainment App ஆகிய ஆப்ஸ்கள் பாகிஸ்தான் ஹேக்கர்களின் ஆப்ஸ்கள் என்றும் எனவே இந்த ஆப்ஸ்களை டவுன்லோடு செய்திருந்தால் உடனே மொபைலில் இருந்து நீக்கும்படியும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.,

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் மேற்கண்ட ஆப்ஸ்களை தங்கள் மொபைலில் இருந்து அன்-இன்ஸ்டால் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

Leave a Reply