நேற்று மோடி, இன்று அமித்ஷா; தமிழகம் நோக்கி வரும் பாஜக தலைவர்கள்

நேற்று மோடி, இன்று அமித்ஷா; தமிழகம் நோக்கி வரும் பாஜக தலைவர்கள்

பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்த நிலையில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகிறார்

இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர் அவர் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது

2024 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்க புதிய வியூகம் அமைக்கவும் அவர் தமிழக தலைவர்கள் ஆலோசனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது