ஹாலிவுட் நடிகை தத்தெடுத்த இந்திய வாலிபர் விபத்தில் மரணம்

ஹாலிவுட் நடிகை தத்தெடுத்த இந்திய வாலிபர் விபத்தில் மரணம்

1அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை மியா பாரோ அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது கொல்கத்தாவில் உள்ள அனாதை இல்லம் ஒன்றில் போலியோவால் கால் ஊனமுற்ற ஒரு சிறுவனை தத்தெடுத்தார். தத்தேஸ் என பெயரிட்டு அமெரிக்காவுக்கு அழைத்து சென்ற அவர் அச்சிறுவனுக்கு சகல வசதிகளும் செய்து கொண்டுத்தார்.

இந்நிலையில் அந்த சிறுவன் தற்போது வளர்ந்து 27 வயது வாலிபனாகியுள்ள நிலையீல் கனெக்டிக் பகுதியில் ரோஸ்பர்ரி என்ற இடத்தில் கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.

குழந்தை இல்லாத காரணத்தால் நடிகை மியா பாரோ தத்தேஸ் உள்பட 9 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையில் தத்து பிள்ளை ஒன்றை அவர் இழந்ததால் பெரும் சோகத்துடன் காணப்படுகிறார்.

நடிகை மியா பாரோ‘ரோஸ்மேரிஸ் போமி’ என்ற படத்தின் மூலம் பிரபலமானார் என்பதும் இவர் கடந்த 1994-ம் ஆண்டு தனது கணவர் வுட் ஆலன் பாரோவை விவாகரத்து செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.