நீட் தேர்வை திரும்ப பெறாவிட்டால் மாதம் ஒரு குண்டுவெடிப்பு: மொட்டை கடிதத்தால் பரபரப்பு

நீட் தேர்வை திரும்ப பெறாவிட்டால் மாதம் ஒரு குண்டுவெடிப்பு: மொட்டை கடிதத்தால் பரபரப்பு

அரியலூர் அனிதாவின் உயிர் தியாகத்திற்கு பின்னர் அவருடைய மரணத்திற்கு நீதிகேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் அமைதியாக வன்முறைக்கு இடம் கொடுக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சென்னை ரயில் நிலையத்திற்கு ஒரு மொட்டை கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் ரயில் நிலையங்களில் மாதம் ஒரு குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது

அமைதியாக போராடி வரும் மாணவர்களின் போரட்டத்தை குலைப்பதற்காக சில விஷமிகள் இந்த மொட்டை கடிதத்தை அனுப்பியிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து மொட்டை கடிதம் எழுதியவரை அடையாளம் காண செய்ய வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply