நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ஹிப்ஹாப் தமிழா ஆதி படம்!

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த சிவகுமாரின் சபதம் என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த திரைப்படமான அன்பறிவு என்ற திரைப்படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளது

ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் பொங்கல் தினத்தில் இந்த படமும் ரிலீசாக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

அன்பறிவு திரைப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதும் இந்த படத்தை அஸ்வின் ராம் என்பவர் இயக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது