shadow

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடா? ஹிலாரி குற்றச்சாட்டு

hilariஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருப்பதாகவும், அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷ்யாவின் ஊடுருவல் இருப்பதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து உளவுத் துறையின் கவனத்துக்கு வந்துள்ளதாகவும் இதுகுறித்து உளவுத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஹிலாரி கூறியபோது, ‘குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்த ஊடுருவல் நடவடிக்கை ஆரம்பித்தது என்பதும், ரஷிய அதிபர் புதினின் கொள்கைகளுக்குத் தனது ஆதரவை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிடுகிறது என்கிற புகார் உளவுத் துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. நமது ஜனநாயக முறையிலான தேர்தலில் ரஷியத் தலையீட்டுக்கான வாய்ப்பு உள்ளது என்பது கவலையளிப்பதாக உள்ளது என்று ஹிலாரி கிளிண்டன் கூறினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு டொனால்ட் டிரம்ப் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஹிலாரியின் கற்பனை குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply