shadow

3 மாகாணங்களில் மறு ஓட்டு எண்ணிக்கை. ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தல்

hilari-trupmகடந்த 8ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து டொனால்ட் டிரம்ப் அதிரடியாக வெற்றி பெற்றார். வரும் ஜனவரியில் அவர் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் 3 மாகாணங்களில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று ஹிலாரி கிளிண்டன் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹிலாரி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிக்சிகான், பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் டெனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள ஹிலாரி ஆதரவாளர்கள் இந்த மூன்று தொகுதிகளிலும் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த 3 மாகாணங்களிலும் கம்ப்யூட்டர் உதவியுடன் செயல்பட்ட ஓட்டு எந்திர முறை பயன்படுத்தப்பட்டது. அந்த ஓட்டு எந்திரத்தை ஹேக்கிங் முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தகவல்களை மாற்றி முறைகேடு செய்திருக்கலாம் என பிரபல கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் அலெக்ஸ்ஹால்டர்மென் கூறி இருக்கிறார். ஆனால் ஹிலாரி ஆதரவாளர்களின் கோரிக்கையை அந்நாட்டு தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ளுமா?என்பது தெரியவில்லை

Leave a Reply