shadow

‘ஒபாமாவின் பிறப்பை சந்தேகப்படுவதா? டொனால்ட் டிரம்புக்கு ஹிலாரி கண்டனம்

hilari and obamaஅமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹிலாரிக்கு ஆதரவாக ஒபாமா களத்தில் இறங்கியுள்ளதாக் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி வெள்ளை மாளிகைக்குள் நுழைய டொனால்ட் தகுதியில்லாதவர் என்று ஒபாமா கூறியது பெரும் பரபர்பபை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய டொனால்ட், ‘ஒபாமா அமெரிக்காவில் பிறந்தவரா? என ஆராய வேண்டியுள்ளது’ என்று அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். இதற்கு பதில் கூறும் வகையில் பேசிய ஹிலாரி கிளிண்டன், ஒபாமா அமெரிக்காவில்தான் பிறந்தாரா? என சந்தேகிப்பது குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் அசிங்கமான பிரிவினைவாத அரசியல் அணுகுமுறையை சுட்டிக்க்காட்டியுள்ளது. இவர் நம்முடைய அதிபராக வேண்டும் என்று நினைக்கிறார். இதைப்போன்ற சகிப்புத்தன்மை இல்லாத அசிங்கமான அரசியல் அணுகுமுறையை இவர் எப்போது கைவிடப் போகிறார்? என்று தெரியவில்லை.

இவரது பேச்சுகளில் இருந்து வெளியாகும் கருத்துகள் மிகவும் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. வேற்று நாட்டில் பிறந்தவர்கள், வேற்று இனம் மற்றும் மதம் சார்ந்தவர்களுக்கு விடுக்கப்படும் மிரட்டலாக அவரது பேச்சு அமைந்துள்ளது. அமெரிக்காவில் வாழும் சுமார் 1.6 கோடி முஸ்லிம்கள் மற்றும் லத்தீன் இனத்தவர்கள் வெளியேற்ற அவர் திட்டமிட்டுள்ளார். இதை எதிர்த்து நாம் இருமடங்கு சக்தியாகவும், இருமடங்கு தெளிவாகவும் செயல்பட வேண்டியுள்ளது.

நான் அதிபராக பொறுப்பேற்றால் 100 நாட்களுக்குள் குடியுரிமைசார்ந்த தற்போதைய நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்யப்படும். அமெரிக்காவில் வாழும் லத்தீன் மக்கள் வெளிநபர்களோ, ஊடுருவி இங்கு குடிபெயர்ந்தவர்களோ அல்ல; அவர்கள் நமது அண்டைவீட்டினர், நமது சகாக்கள், நமது நண்பர்கள், நமது குடும்பத்தினர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களது உழைப்பால் அமெரிக்காவை பலம்மிக்க நாடாக உயர்த்தியுள்ளனர்.

அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டிய வேளை வந்து விட்டது, உங்களுடன் நான் எப்போதும் துணையாக இருப்பேன். உங்களது தேவைகளை நான் கவனித்து கொள்வேன் என்பதை மீண்டும் தெரிவித்து கொள்வதுடன் அமெரிக்காவின் அனைத்து பகுதிகளில் வாழும் மக்களுக்கும் தேவையானவற்றையும் நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன்.

Leave a Reply