shadow

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக லண்டன் ஐகோர்ட் அதிரடி தடை

1பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறாமல் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டது தவறானது என்று கூறி லண்டன் ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் விவகாரத்தில் பிரிட்டிஷ் அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதா? வேண்டாமா? என்பது குறித்த பொதுவாக்குப்பதிவு ஒன்று கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது.பெரும்பாலான மக்கள் வெளியேறலாம் என்று வாக்களித்ததால் இந்த முடிவில் அதிருப்தி அடைந்த பிரதமர் கேமரூன் பதவி விலகினார்.

எனவே இந்த வாக்கெடுப்பின் முடிவின்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை புதிய பிரதமர் தெரசா மேற்கொண்டார். ஐரோப்பிய யூனியனை அமைப்பதற்கான லிஸ்பன் ஒப்பந்தத்தின் பிரிவு 50-இன்படி, அமைப்பிலிருந்து விலகுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாடாளுமன்ற அனுமதியின்றி அரசே வெளியிட தெரசா மே தலைமையிலான அரசு முடிவு செய்தது.

ஆனால், நாடாளுமன்ற அனுமதியில்லாமல் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட அரசுக்கு அதிகாரமில்லை என்று இதுகுறித்த வழக்கு ஒன்றில் நேற்று லண்டன் ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை அணுகப் போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply