shadow

ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை எப்போது? நீதிபதி அதிரடி தீர்ப்பு

ramkumarசுவாதி கொலை வழக்கில் கடந்த வாரம் மர்மமான முறையில் புழல் சிறையில் மரணம் அடைந்த ராம்குமாரின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படுவது எப்போது என்பது குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் குழுவில் எங்களது தரப்பு டாக்டர் ஒருவரும் இடம் பெற வேண்டும் என ராம்குமாரின் தந்தை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவருடைய கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரசு டாக்டர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து ராம்குமாரின் தந்தை இதுகுறித்து வழக்கு தொடர்ந்தா. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 2 நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்ததால் இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டது.

இதன்படி ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக கிருபாகரன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று இந்த வழக்கை விசாரணை செய்து வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “ராம்குமார் உடற்கூறு ஆய்வில் தனியார் மருத்துவருக்குப் பதிலாக எய்ம்ஸ் மருத்துவரை சேர்க்குமாறும், செப் 27-க்குள் மருத்துவரை முடிவு செய்து பிரேத பரிசோதனையை முடிக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

பிரேத பரிசோதனை வழக்கில் தனியார் மருத்துவரை சேர்க்க வேண்டும் என ராம்குமார் தந்தை பரமசிவம் வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.

Leave a Reply