shadow

நடன இயக்குனர் பிருந்தா இயக்கிய ஹே சினாமிகா’ என்ற படத்தின் இரண்டரை நிமிட ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

துல்கர் சல்மான், அதிதிராவ் ஹைத்ரி, காஜல் அகர்வால் நடிப்பில் கோவிந்த் வசந்தா இசையில் உருவான இந்த திரைப்படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.

இந்த டிரைலரை பார்க்கும்போது இந்த படம் செம ரொமான்ஸ் படமாக இருக்கும் என்று கருதப்படுவதால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல காதல் படத்தை பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அழகான இந்த டிரைலர் இதோ: