shadow

icre creamதெலுங்கு படவுலகின் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, தற்போது எடுத்து முடித்துள்ள ‘ஐஸ்க்ரீம்’ படம் வரும் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை தேஜஸ்வியின் நிர்வாண புகைப்படங்கள் தற்போது மீடியாவில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் பிரச்சனையும் உடன்பிறந்த சகோதரர்கள் போல. அவர் படம் எடுத்தாலும் சரி பேட்டி கொடுத்தாலும் சரி அதில் ஏதாவது பிரச்சனை உண்டாகும். நவ்தீப் மற்றும் தேஜஸ்வி முக்கிய நடிகர்களாக நடித்து ராம்கோபால் வர்மா இயக்கிய படம் ‘ஐஸ்க்ரீம்’. இந்த படம் வரும் வாரம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் சில ஸ்டில்களை நேற்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படங்கள் ஊடகங்கள், இணையதளங்கள் மட்டுமின்றி ஐதராபாத்தின் ஒரு சில முக்கிய இடங்களிலும் போஸ்டர்களாக வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர்களை பார்த்து பொதுமக்களும், மகளிர் அமைப்புகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. நிர்வாண மற்றும் உடலுறவு காட்சிகள் அடங்கிய போஸ்டர்கள் சிட்டியின் முக்கிய இடங்களில் ஒட்டி விளம்பரப்படுத்திய படக்குழுவினர்களுக்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளன. ஒருசிலர் இந்த போஸ்டர்களை கிழித்து போடவும் செய்துள்ளனர்.

ஐதராபாத்தில் உள்ள பெண்கள் அமைப்பை சேர்ந்த ஒருசிலர் இன்று காலை கூட்டமாக இந்த போஸ்டர் இருக்குமிடம் சென்று போஸ்டர்களை செருப்பால் அடிக்கும் போராட்டம் நடந்தது. மேலும் இந்த படத்தில் நடித்த நடிகையின் மீதும் இயக்குனர் மீதும் வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.ஐதராபாத் மட்டுமின்றி ஆந்திரா முழுவதும் இந்த படம் வரும் வாரம் வெளியாகவுள்ள நிலையில் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் படம் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐஸ்க்ரீம் படத்தின் பாடல் வெளியீடு இன்று ஐதராபாத்தில் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply