ஜிம்பாவே நாட்டில் தந்தை ஒருவர் தனது மகனை தன் கண் முன்னே முதலை ஒன்று கடித்ததை பார்த்து ஆக்ரோஷமடைந்து முதலையிடம் இருந்து மகனை மீட்ட வீரச்செயல் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாவே நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு ஆற்றில் டஃபாட்ஜ்வ கசசேரே என்பவர் தனது 11 வயது மகன் தபிவ இறங்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த முதலை ஒன்று தபிவ என்ற சிறுவனின் காலை கவ்விப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை சிறிதும் பயப்படாமல் முதலையின் முதுகில் ஏறி கையாலேயே முதலையை தாக்கினார். பின்னர் முதலையின் கண்ணில் குத்தினார். இதனால் நிலைகுலைந்துபோன முதலை தனது வாயிலிருந்த சிறுவனை விட்டுவிட்டது. ரத்தக்காயத்துடன் உயிருக்கு போராடிய மகனை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றார் அந்த பாசமிகு தந்தை.

சிறுவனின் உயிருக்கு ஆபத்து இல்லை எனினும் சிறுவனின் கால் முற்றிலும் சேதமடைந்தது. தந்தையின் வீரச்செயலை நாடு முழுவதும் சமூக இணையதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply