பிரபல பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான தர்மேந்திரா- ஹேமாமாலியின் இரண்டாவது மகள் அகானா தியோ திருமணம் நேற்று மும்பையில் மிக பிரமாண்டமாக நடந்தது.

தர்மேந்திரா- ஹேமா மாலினி தம்பதிகளுக்கு ஈஷா தியோ, அகானா தியோல் எனஇரண்டு மகள்கள். நேற்று மும்பையில் இரண்டாவது மகள் அகானா தியோலுக்கும், டெல்லி தொழில் அதிபர் வைபவ் வோரா அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. முதல் மகள் திருமணத்தை தமிழ் மற்றும் மராத்தி கலாச்சாரத்தில் நடத்தி வைத்த ஹேமாமாலினி, இரண்டாவது மகள் திருமணத்தை தமிழ் மற்றும் பஞ்சாபி முறைப்படி நடத்தி வைத்தார். தமிழ் மற்றும் வட இந்திய புரோகிதர்கள் இணைந்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.

அகானாவை திருமணம் செய்யும் தொழிலதிபர் வைபவ், ஈஷா தியோலின் திருமணத்திற்கு வந்திருந்தபோது, அகனாவுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. அதன்பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்திற்கு பாதுகாப்பிற்காக சல்மான்கானின் பாதுகாவலர்கள் வந்திருந்து பாதுகாப்பு பணியை சிறப்புடன் செய்தனர்.

Leave a Reply