shadow

ஹெலிகாப்டன் ஊழலில் திடீர் திருப்பம். இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி கூறிய முக்கிய தகவல்

thiyagiகடந்த சில நாட்களாக பாராளுமன்றம் ஸ்தம்பிக்க காரணமாக இருந்த ஹெலிகாப்டன் ஊழலில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சம்பந்தப்பட்டுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி உள்பட பாஜகவினர் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக ஃபின் மெக்கனிக்கா நிறுவன தலைமைச் செயலதிகாரியை தான் சந்தித்ததாக இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி.தியாகி விசாரணையின்போது ஒப்புக் கொண்டு விட்டதாக சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகள் எஸ்.பி.தியாகியை விசாரணை செய்து வரும் நிலையில் முதல் நாள் ஃபின் மெக்கனிக்கா நிறுவன தலைமைச் செயலதிகாரியை சந்திக்கவில்லை என்று கூறிய தியாகி, பின்னர் இரண்டாவது நாளில் சந்தித்ததாக ஒப்புக்கொண்டார். அவரிடம் இன்று விசாரணை நடத்த உள்ளதாகவும், இன்னும் பல முக்கிய விஷயங்கள் அவரிடம் இருந்து வெளிவரும் என நம்புவதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேபோல், இந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மற்றொரு நபரான கௌதம் கைத்தானிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த பல தகவல்கள் கிடைக்கும் என்றும் சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
அதேசமயம், ஃபின் மெக்கனிக்கா தலைமைச் செயலதிகாரி ஜாபா, எஸ்.பி.தியாகி இடையேயான சந்திப்பு அதிகாரப்பூர்வமான முறையில் நடைபெற்றதா? என்பது குறித்து சிபிஐ வட்டாரத் தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் சிபிஐயை அடுத்து அமலாக்கத்துறையும் இந்த வாரம் நேரில் ஆஜராகும்படி எஸ்.பி.தியாகிக்கு ம்மன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply