கடலில் இறங்கிய ஹெலிகாப்டர்! மீட்புப்பணிகள் தீவிரம்!

ஓஎன்ஜிசி பணியாளர்கள் 7 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மும்பையில் இருந்து அரபிக்கடல் வழியாக பயணித்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்து கொண்ட விமான ஓட்டிகள் ஹெலிகாப்டரை அவசரமாக ஓஎன்ஜிசி ரிக் சாகர் கிரண் அருகே அரபிக்கடலில் தரையிறக்கினார்கள்.

அரபிக்கடலில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரில் 9 பேரும் மிதவைகளை பயன்படுத்தி கடலில் தத்தளித்தபடி உயிர்பிழைத்தனர்.