சென்னையில் திடீர் போக்குவரத்து நெரிசல்: என்ன காரணம் தெரியுமா?

சென்னையில் திடீர் போக்குவரத்து நெரிசல்: என்ன காரணம் தெரியுமா?

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் திரும்பி உள்ளதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பொங்கல் விடுமுறையாக கடந்த 11ஆம் தேதி முதல் நேற்று வரை விடப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு பெரும்பாலான மக்கள் வெளியூர்களில் இருந்து கிளம்பி சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக கூடுவாஞ்சேரி முதல் தாம்பரம் வரை மிக அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து பலர் கூடுவாஞ்சேரியில் இறங்கி புறநகர் ரயிலில் சென்னை திரும்பி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

இன்று மிக அதிகமாக கூட்டம் இருக்கும் என்ற காரணத்தினால்தான் ஒருசிலர் சுதாரித்து நேற்றே சென்னை திரும்பி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.