அமெரிக்காவில் நியூயார்க் உள்பட பல நகரங்களில் அதிகளவில் பனி நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் சாலைகளில் 4 முதல் 8 அங்குலம் வரை பனி படர்ந்து இருப்பதால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனி காரணமாக வீட்டைவிட்டு வெளியே சென்ற மக்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். கொலராடோ , ஒஹாயோ , பென்சில்வேனியா , நியூஜெர்ஸி , நியூயார்க்  ஆகிய பகுதிகளில் நாளை கடுமையான பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதியோர்களும், குழந்தைகளும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களில் மீட்புப்பணியினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply