shadow

வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட 19 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் 12 மணி வரை 17 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.