இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தொடர் கனமழை!!

தமிழக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 26, 27 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.