shadow

சென்னையில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது