shadow

கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் பல இடங்களில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை காரணமாக திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. தென் கடலோரப் பகுதிகளில் 4.3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுப்ப வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்காத நிலையில் இயற்கையே விவசாயிகளுக்காக மழை பொழிந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply