5 மாநிலங்களில் தேர்தல் ரத்தா? சுகாதார துறையிடம் ஆலோசனை செய்த தேர்தல் கமிஷன்

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை செய்தது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே

இன்றைய ஆலோசனையில் மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது