shadow

விக்ரம், சூர்யாவுக்கு பின் விஜய்: பிரபல இயக்குனர் முடிவு

பிரபல இயக்குனர் ஹரி தற்போது விக்ரம் நடித்து வரும் ‘சாமி 2’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50%க்கும் மேல் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் சூர்யாவின் குடும்பம் மற்றும் செண்டிமெண்ட் கலந்த படத்தை இயக்கவுள்ளதாக நேற்று செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஹரி, விஜய் நடிக்கும் அதிரடி ஆக்சன் படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை ஹரி, நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply