37 பந்துகளில் சதம் அடித்த ஹர்திக் பாண்டியா: அதிரடி ஆட்டம்

37 பந்துகளில் சதம் அடித்த ஹர்திக் பாண்டியா: அதிரடி ஆட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியா கடந்த சில போட்டிகளில் விளையாடாத நிலையில் தற்போது அவர் உள்ளூர் போட்டி ஒன்றில் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் சதம் அடித்துள்ளார்

முதுகுத்தண்டு காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டே தற்போது முழு உடல் தகுதி பெற்று மும்பையில் நடைபெற்ற சிஏஜி ((CAG)) அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 37 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். இதில் 10 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ள இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பிடிப்பார் என்று கருதப்படுகிறது ஏற்கனவே அவர் நல்ல பந்து வீச்சாளர் என்பதால் ஒரு ஆல்ரவுண்டர் இந்திய அணிக்கு தற்போது தேவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.