shadow

தமிழில் டுவீட் செய்து தமிழராகவே மாறி வரும் ஹர்பஜன்சிங்

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வரும் ஏப்ரல் 7-ந்தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரரான ஹர்பஜன் சிங் சிஎஸ்கே அணிக்கு வந்துள்ளது அந்த அணியின் பலம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்பட்ட உடனே ஹர்பஜன் சிங் தனது மகிழ்ச்சியை வெளிகாட்டும் வகையில் டுவிட்டரில் தமிழில் ஒரு பதிவு செய்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

நான் வந்துட்டேன்னு சொல்லு

தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா.

உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, “வீரமா”, காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே “மெர்சலாகுது”

தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். மேலும் அவர் செய்த மற்றொரு டுவிட்டில் அவர் பெயர் அச்சிடப்பட்ட சென்னை அணியின் ஜெர்சியின் படத்தை பதிவு செய்துள்ளார். அதில் 27 என்ற எண் அச்சிடப்பட்டிருந்தது.

Harbhajan singh tweeted in tamil

Leave a Reply