கிரிக்கெட்டில் இருந்து ஹாக்கிக்கு மாறிய ஹர்பஜன்!

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்த டிக்கிலோனா என்ற படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள டுவிட்டில் இந்த படத்தில் சந்தானம் மற்றும் ஹர்பஜன் ஆகிய இருவரும் ஹாக்கி வீரர்கள் கேரக்டரில் நடித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சந்தானம் நடித்துள்ள மூன்று கேரக்டரில் ஒரு கேரக்டர் ஹாக்கி வீரர் என்பதும் ஹர்பஜன், சர்தேவ் சிங் என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.