அங்காளி!! பங்காளி!! மாமன்!! மச்சான்!! எல்லாம் தயாரா? ஹர்பஜன்சிங் கேள்வி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததில் இருந்தே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் அவ்வப்போது தமிழில் டுவீட் போட்டு அசத்தி வருவது தெரிந்ததே.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஹர்பஜன்சிங் விளையாடவுள்ளார்.

இந்த நிலையில் இன்று அவர் ஒரு டுவீட்டை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வசனத்துடன் பதிவு செய்துள்ளார்.

“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி”சூப்பர் ஸ்டார் பேசுன வரி அவ்ளோ அழகு. என்னோட அங்காளி!! பங்காளி!! மாமன்!! மச்சான்!! எல்லாம் சிங்கம் சீற்றத்தை பாக்க தயாரா இருக்கீங்களா? நான் தயார்
சும்மா கிழி!! நெருப்பு பேரோட

இந்த டுவீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply