shadow

Velayutham Audio Release Functionவிஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க சிம்புதேவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் மற்று ஹன்சிகா ஆகியோர் நடிக்கவுள்ளனர். வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படமாக அமையவுள்ள இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயினியாக நடிக்க ஹன்சிகா விருப்பமில்லாமல் இருக்கின்றாராம். அதுவும், ஸ்ருதிஹாசனின் அதிரடி கவர்ச்சிக்கு முன்னால் தனது நடிப்பு எடுபடாமல் போய்விடும் எனபதற்காகவும் இந்த படத்தில் இருந்து விலக ஹன்சிகா முடிவு செய்திருப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.

ஏற்கனவே சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவின் அதிரடி கவர்ச்சிக்கு முன்னால் தனது நடிபு எடுபடாமல் போன அனுபவம் பெற்ற ஹன்சிகா, இந்த படத்திலும் அதுபோன்ற ஒரு நிலைமை வருவதை தவிர்க்க படத்தில் இருந்து விலகுவதுதான் சரியான முடிவாக இருக்கும் என அவர் கருதுகிறாராம். மேலும் படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் என்றும் தனக்கு துக்கடா வேடம் என்றும் இணையதளங்களில் நேற்று வந்த செய்திகளை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம் ஹன்சிகா.

ஆனால் “விஜய் 58” படக்குழுவினர் இந்த தகவல்களை மறுத்துள்ளனர். ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவருக்கும் சமமான கேரக்டர்களைத்தான் சிம்புதேவன் அமைத்துள்ளார் என்றும் ஹன்சிகாவுக்கு வேண்டாதவர்கள் யாரோ இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பிவிடுகின்றனர் என்றும் சிம்புதேவன் தரப்பில் இருந்து விளக்கம் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply