shadow

3 இடியட்ஸ், பாகுபலி போன்ற ஒருசில இந்திய படங்களே சீனாவில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது ஹன்சிகாவின் அடுத்த படம் சீனாவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்த ’105’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த படத்தில் ஹன்சிகா ஒருவர் மட்டுமே நடித்துள்ளார் என்பதும் இந்த படம் ஐந்தே நாட்களில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

மிகக்குறைவான வசனங்கள் இந்த படத்தில் இருப்பதால் இந்த படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த படத்தை சீனா மற்றும் கொரியாவிலும் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது