ஹால்மார்க் முத்திரை இல்லாமல் தங்கநகை விற்பனை செய்ய கூடாது: மத்திய அரசு

இந்தியா முழுவதும் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை இல்லாமல் தங்க நகைகள் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது

இதுகுறித்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் லீலா நந்தன் அவர்கள் கூறியபோது ’ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து ஹால்மார்க் முத்திரையுடன் தான் கண்டிப்பாக தங்க நகைகள் விற்பனை செய்ய வேண்டும்.

இதற்கான காலக்கெடு ஏற்கனவே பலமுறை ஒத்தி போடப்பட்டுள்ளது.
ஜூன் 1-ஆம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரையுடன் தங்க நகை விற்பனை செய்யப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Leave a Reply