அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் நீட்டிப்பு: பள்ளி கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் நீட்டிப்பு: பள்ளி கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது