shadow

கச்சத்தீவு குறித்து தற்போது பேசுவது வெட்டிப் பேச்சு: எச்.ராஜா

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அதாவது 1974ம் ஆண்டு இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன

இந்த நிலையில் கச்சத்தீவைக் கொடுத்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதைப் பற்றி பேசுவது வெட்டிப்பேச்சு என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா ராமநாதபுரத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

மேலும் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது தவறுதான் என்றாலும் தற்போது அதனைப் பற்றி பேசுவதில் பயனில்லை என்று எச்.ராஜா கூறியுள்ளார். எச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply