shadow

உடலை வருத்தி உண்ணாவிரதம் வேண்டாம்: ஜீயருக்கு எச்.ராஜா கோரிக்கை

ஆண்டாள் சந்நிதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜீயரை, உண்ணாவிரதம் வேண்டாம் என்ற கோரிக்கையை வைத்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா

இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று உண்ணாவிரதம் இருந்து வரும் ஜீயரை நேரில் சந்தித்த எச்.ராஜா, உடலை வருத்தி இருந்து வரும் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். மேலும் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆண்டாள் பற்றி ஆராய்ச்சி எதுவும் நடக்கவில்லை என்று இண்டியானா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
கட்டுரைகளில் முதலில் புகழ்ந்து விட்டு, பின்னர் இகழ்வது வைரமுத்து பாணி என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதேபோல் உண்ணாவிரதத்தை கைவிடும்படி நேரில் கேட்டுக்கொள்ள நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகரும் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply