சிவகுமார் மீது நடவடிக்கை, இந்து விரோதிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

எச் ராஜா கேள்வி

திருப்பதி கோவிலைப் பற்றி இழிவாக பேசிய தமிழக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட 8 பேர் மீது திருமலை தேவஸ்தானம் வழக்கு பதிவு செய்துள்ளது

ஆனால் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி இழிவாக பேசிய இந்து விரோதிகள் மீது அறநிலையத்துறை வழக்கு பதியவில்லை. ஏன்? இவர்களும் இந்து விரோதிகள்

இவ்வாறு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எச்.ராஜாவின் இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply