shadow

அரசு மாறும் போது பாலிசி மாறும் என்பது இயல்பு தான்.  இன்ஃபோசிஸ் சிஇஓ விஷால் சிக்கா கருத்து

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு “எச் – 1 பி” மற்றும் “எல் – 1” என்ற விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த விசாக்கள் மூலம் இந்தியர்கள் 60,000 பேர் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர், 25,000 பேர் கல்வி பயில்கின்றனர். அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வந்து வேலை செய்பவர்களின் விசா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களினால் அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பை இழக்கின்றனர் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இன்ஃபோசிஸ் சிஇஓ விஷால் சிக்கா, டிரம்ப்பின் நிர்வாகம் நட்பு ரீதியில் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடிப்படையில் டொனால்டு டிரம்ப்பும் ஒரு பிஸினஸ் மேன் என்பதால் வெளிநாட்டு நிறுவனங்களிடம் நட்பு ரீதியில் நடந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பதாக சிக்கா கூறியுள்ளார்.

இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு 60 சதவீத வருவாய் அமெரிக்காவில் இருந்து கிடைக்கிறது. அரசு மாறும் போது பாலிசி மாறும் என்பது இயல்பு தான் என்றாலும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் இன்ஃபோசிஸ் சிஇஓ கூறியிருக்கிறார்.

Leave a Reply