இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதொடு, ஹீரோவாகவும் நடித்து இரண்டு குதிரைகளில் பயணம் செய்து வருகிறார். இவர் நடிக்கும் பென்சில் படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ், மற்றொரு படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் பெயர் ‘த்ரிஷா இலியானா நயன்தாரா’. இந்த படத்தை ஆதிக் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். அவர்களின் பெயர்கள்தான் த்ரிஷா, இலியானா மற்றும் நயன் தாரா. இவர்கள் மூவரின் காதலில் சிக்கிய ஒரு இளைஞன், எடுக்கும் முடிவு என்பதை காமெடியாக கூறும் கதைதான் இந்த படம்.
இந்த படத்தை விஜய் சேதுபதியின் மெல்லிசை படத்தை தயாரிக்கும் ரேபல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்கின்றது.
மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் பாரதிராஜாவும், ஸ்ரீதேவியும் நடிக்க உள்ளனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.