shadow

‘குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி பாடிய திரைப்பட பாடல் சற்று முன் வெளியாகியுள்ளது.

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி.

இவர் கௌதம் கார்த்திக் நடித்த ’ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடலை ஷிவாங்கி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பாடியுள்ளார். ’நீ என் உசுருக்குள்ள’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.