ஜிவி பிரகாஷின் ‘செல்பி’ டிரைலர் ரிலீஸ்!

ஜிவி பிரகாஷ் மற்றும் கெளதம் மேனன் நடித்த ’செல்பி’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.

கலைபுலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் மதிமாறன் என்பவரது இயக்கத்தில் உருவாகி வரும் ’செல்பி’ படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் பொறியல் கல்லூரி மாணவராகவும், கௌதம் மேனன் வில்லனாகவும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் நாயகியாக வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கத்துரை உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகும்.