குண்டடிப்பட்ட புதுக்கோட்டை சிறுவன் பரிதாப பலி!

புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சி.ஐ.எஸ்.எஃப்.வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்ட போது தவறுதலாக சிறுவனின் மீது பாய்ந்த நிலையில் அந்த சிறுவன் இன்று உயிரிழந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி நார்த்தமலை என்ற பகுதியில் சிஐஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு சிறுவன் சென்ற போது தவறுதலாக சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பட்டுவிட்டது.

அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.