shadow

902424c6-6fcf-40f4-ae0d-386094eeb637_S_secvpf

சிலரு‌க்கு ‌பி‌த்த உட‌ம்பாக இரு‌க்கு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் அதிக பித்த அளவை குறை‌க்க கு‌ல்க‌ந்து சா‌ப்‌பிடலா‌ம். வயிற்றுக் கோளாறுகளுக்கு‌ம் நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். தினமும் 1 ஸ்பூன் குல்கந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.

மேலும் பாலில் குல்கந்து கலந்து குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் உடலுக்கு சக்தியும் கிடைக்கும். பெண்கள் மாதவிடாய் சமயங்களில் இதனை சாப்பிட்டு வந்தால் வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறையும். வெள்ளப்போக்கையும் குறைக்கும். தவிர குல்கந்து ஆண்மை ச‌க்‌தியை‌ப் பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும்.

ரோஜா இதழ்களில் உள்ள எண்ணெய் த‌ன்மை ஆண்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. மல மிளக்கியாகவு‌ம் செயல்படு‌கிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது. பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்து. முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

Leave a Reply