17 வயது இளம்பெண்ணின் கின்னஸ் சாதனை என்ன தெரியுமா?

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 17 வயது நிலான்ஷி பட்டேல் என்பவர் டீன் ஏஜில் மிக நீளமான முடியை கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை பெற்றுள்ளார். இவரது தலைமுடி 190 செமீ நீளம் உடையதாக உள்ளதாம்

இதற்கு முன்னர் 170.5 செமீ நீளம் கொண்ட முடியை கொண்டவர் என்ற சாதனையை கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது

தனது ஆறு வயதில் இருந்தே முடி வளர்க்கும் ஆர்வம் தனக்கு ஏற்பட்டதாகவும், இதைவிட இன்னும் நீளமாக வளர்த்து இந்த சாதனையையும் உறியடிப்பேன் என்று நிலான்ஷி பட்டேல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply