பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்துக்கு முதல் முறையாக ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நரேந்திரமோடி& ராகுல் ஒருவரையொருவர் சமீபமாக அதிகம் தாக்கி பேசி வருகிறார்கள். மேலும் ராகுல் காந்தியில் கோபம் காரணமாக அரசியல்வாதிகள் தண்டனை பெறும் அவசர சட்டத்தையும் வாபஸ் பெற்றது. இந்நிலையில்  இன்று காலை ராகுல் காந்தி சபர்மதி ஆசிரமம் சென்றார். இதைத் தொடர்ந்து இந்திய தேசிய மாணவர் சங்க கூட்டத்தில் அவர் பேசுகிறார். மேலும் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் நாளை ராஜ்கோட் மாவட்டத்திற்குச் சென்று கட்சித் தலைவர்களை சந்திக்கிறார். ராகுல் இந்த 2 நாள் குஜராத் சுற்று பயணம் முக்கியதுவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது

Leave a Reply