இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி கொரோனா வார்டா? அதிர்ச்சி தகவல்

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி கொரோனா வார்டா? அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனையில் ஆண்கள் ஆண்கள் கொரோனா வார்டுகள் இருக்கும் என தெரிந்ததே. ஆனால் குஜராத்தில் உள்ள ஆமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்து, முஸ்லீம் என கொரோனா வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தந்த மதத்தை சேர்ந்தவர்கள் அந்தந்த வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மருத்துவமனையில் சூப்பிரண்டு டாக்டர் ஒருவர் கூறுகையில் ’அரசு அறிவுறுத்தல்படியே இந்து முஸ்லீம் என வார்டுகள் பிரிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். ஆனால் இதனை மாநில சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அரசு இவ்விதமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளது

அரசு அறிவுறுத்தலின் பேரில் அந்த மருத்துவமனையில் இவ்வாறு மதத்தின் அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டதா அல்லது அந்த மருத்துவமனையின் நிர்வாகமே இவ்விதம் பிரித்ததா என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இவ்வாறு மதத்தின்படி பிரிவினை ஏற்படுத்துவது தவறு என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

Leave a Reply