5 வயதில் புத்தகம் எழுதி வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்த சிறுமி

இங்கிலாந்து நாட்டின் வெய்மவுத் பகுதியைச் சேர்ந்த 5-வது சிறுமி பெல்லா ஜே டார்க்.

இவர் தனது 5 வயதில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

மிக இளைய வயதில் புத்தகத்தை எழுதி வெளியிட்ட பெண் என்ற சாதனையை பெல்லா ஜே டார்க் (5 வயது 211 நாட்கள்) படைத்துள்ளார்.

அவர் *”தி லாஸ்ட் கேட்”* என்ற தலைப்பில் பூனையை பற்றிய கதையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்த புத்தகம் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி அன்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது வரை இந்த புத்தகம் 1,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு டோரதி ஸ்ட்ரெய்ட் என்பவரால் தனது ஆறு வயதில் எழுதப்பட்ட புத்தகம் தான் மிக இளைய வயதில் எழுதப்பட்ட புத்தகத்துக்கான கின்னஸ் சாதனை படைத்து இருந்தது. இந்த புத்தகம் 1964 வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அந்த சாதனையை பெல்லா ஜே டார்க் முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.