shadow

15 பெண்களை கற்பழித்த ராணுவ அதிகாரிகளுக்கு 360 ஆண்டுகள் சிறை. கவுதமலா நீதிமன்றம் தீர்ப்பு
gautamala
வடஅமெரிக்காவை சேர்ந்த மெக்சிகோ அருகே உள்ள நாடு கவுதமலா. இந்த நாட்டின் ராணுவத்தில் கமாண்டராக பணிபுரியும் பிரான்சிஸ்கோ ரெயெஸ் கிரோன் மற்றும் ராணுவ கமிஷனராக பணிபுரியும் ஹெரிபெட்டோ வால்டெஷ் அசிஜ் ஆகிய இருவரும் கடந்த 1980ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின்போது பல பெண்களை கடத்தி சென்று அடிமைகளாக்கியதோடு அவர்களை தொடரந்து கற்பழித்தும் வந்துள்ளனர்.  

இந்த இரண்டு அதிகாரிகளால் மொத்தம் 15 பெண்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதுமட்டுமின்றி ஒருசில ஆண்களையும் குழந்தைகளையும் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் இருவருக்கு, 360 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை கேட்டதும் நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியினை வெளியிட்டனர்.

Leave a Reply