தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்து 556 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக குரூப்-4 தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 25 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள்.
குரூப்-4 தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
குரூப்-4 தேர்வை நிறைய மாணவர்கள் எழுதியதால் அதை வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. அதில் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டன. இருப்பினும் அனைத்தையும் மீண்டும் சரிபார்க்கும் பணி உள்ளது. எனவே இந்த மாத இறுதி அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது.
மேலும் காலியாக கிடக்கும் குரூப்-1 அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்ப புதிதாக குரூப்-1 தேர்வு நடத்த உள்ளோம். அதற்கான விவரங்கள் துறைவாரியாக சேகரிப்பட்டு வருகிறது. பெரும்பாலான துறைகளில் இருந்து காலிப்பணியிடங்கள் விவரம் வந்துவிட்டது. சில துறைகளில் இருந்து மட்டும் இன்னும் வரவில்லை. எப்படியும் குரூப்-1 தேர்வுக்கான விவரங்கள் அடங்கிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வும் நடத்தப்பட்டு அதன் விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.