shadow

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் கொரோனா தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில் அதில் கிடைத்த சில முடிவுகள் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த ஆய்வில் கிரீன் டீயில் உள்ள மூலக்கூறுகளுக்கு கொரோனாவை எதிர்க்கும் சக்தி இருப்பதாகவும், இதனால் கிரீன் டீ ரெகுலராக குடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிய வந்துள்ளது.

கிரீன் டீயில் உள்ள கேட்சின்ஸ் எனும் ஒருவிதமான பாலிபீனால்கள் உள்ளது என்றும், இவை கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்றும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி அம்ஜத் உசைன் கூறியுள்ளார்.

கிரீன் டீ அருந்துவதால் இதய கோளாறு, கண் மற்றும் நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறு போன்ற நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.